👷♂️ கதை தொடக்கம்:
ரவி சுரங்கத்தில் புதுசா சேர்ந்தவன். ஒரு நாள் வேலை முடிஞ்சு வீட்டுக்கு போகும்போது, சந்தையில் சில வெடிபொருட்கள் (Explosives) விற்கப்படுவதை பார்த்தான்.
💭 “இது சுலபமா வேலை செய்யும் போல இருக்கு… குறைந்த விலைக்கு வாங்கிக்கலாமா? சுரங்கத்துலயே use பண்ணலாமே!” என்று மனசில் யோசிச்சான்.
அடுத்த நாள் காலை, ரவி அந்தக் கேள்வியை மேலாளரிடம் கேட்டான்.
மேலாளர் சொன்னார்:
“ரவி, சுரங்கம் சந்தை இல்ல.
Reg 153 ரொம்ப தெளிவா சொல்றது – சுரங்கத்துக்குள் Owner, Agent அல்லது Manager கொடுத்த Explosives மட்டும் தான் உபயோகிக்கணும்.
வேறு எங்கிருந்தும் வாங்கக்கூடாது.
அதுவும் நல்ல தரம் (Good Quality) & நல்ல நிலை (Good Condition) இருக்கணும்.”
👉 ரவிக்கு புரிந்தது – சுரங்கத்தில் பாதுகாப்பு என்பதுதான் முதன்மை.
Share This News